முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது இத்தாலிய உறவினர்களை விடுமுறைக்கு அழைத்து செல்வதற்காக இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலைப் பயன்படுத்தினார் என மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் கொடுப்பதற்கு பதிலாக, நாட்டுக்காகப் பணியாற்றி உயிர் நீத்த தலைவர் ராஜீவ் காந்தி அவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என அகமது பட்டேல் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். உண்மை சில சமயங்களில் கசக்கும். பிரபல பத்திரிக்கையாளர் சேகர் குப்தா தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மோடி குறிப்பிட்ட சம்பவம் நடைபெறவில்லை என ராகுல் காந்தி மறுக்கவில்லை. விடுமுறையை கழிக்க செல்லவில்லை, அது அரசாங்க நிகழ்ச்சி, எனது தந்தையுடன் நானும் சென்றேன் என கூறியுள்ளார். அரசாங்க நிகழ்ச்சியில் குறிப்பாக பாதுகாப்பு சம்பந்தமானதில் கலந்து கொள்ள பிரதமரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி உண்டா என தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மோடி சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது என வாதிடுபவர்களுக்கு, 1988 ஜனவரி மாதம் 24ந் தேதியிட்ட இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கட்டுரை திரும்பி பார்க்க வேண்டும். At the court of Maharajiv என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மாதவன் குட்டி எழுதியுள்ள கட்டுரையில், விடுமுறையை கழிக்க உல்லாச பயனம் என குறிப்பிட்டுள்ளார். Uninhabited தீவு என கட்டுரையாளர் சேகர் குப்தா குறிப்பிட்டுள்ளார். 1988-ல் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப், இந்தியா டுடே பத்திரிக்கையில், பிரதமர் ராஜீவ் காந்தி, ஐ.என்.எஸ். போர்க் கப்பலை தனது விடுமுறையை கழிப்பதற்கு போக்குவரத்தாக பயன்படுத்தியுள்ளார் என எழுதியுள்ளார். ( the INS Viraat was “used to transport the Gandhis and moved in the Arabian Sea for 10 days.”) 1987 டிசம்பர் மாதம் மற்றும் 1988 ஜனவரி மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி ஊடகங்களில் செய்தி வெளியாகிய போது. மறுப்பு தெரிவிக்காத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தற்போது மட்டும் ஊளையிடுவது ஏன், மோடி கூறியதால் என்பதை தவிர வேறு எதுவும் கிடையாது.
மேற்படி தலைப்பிட்ட கட்டுரையில், ராஜீவ் காந்தியுடன் கலந்து கொண்டவர்கள், திருமதி சோனியா காந்தி, அவரது தாயார் பி.மைனோ, சகோதரி Nadia Valdimero, அவர்களின் குழந்தை G.Valdimero, , சோனியாவின் Brother in law Waltr Winci, சோனியாவின் ஜெர்மன் நன்பர் சபினா, இவர்களுடன் அமிதாப் பச்சான் மனைவி, மகன் , மகள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சிங்கின் சகோதர் பிஜேந்திர சிங்கின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளார்கள். அரசு நிகழ்ச்சி என்றால் மனிதன் வாழதா தீவான பங்காராமில் 10 நாட்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்க வேண்டும். போர்க் கப்பல் ஐ.எனஸ்.எஸ். வீராட் விடுமுறைக்காக பயன்படுத்தப்பட்டது என்பது தான் முதன்மையான குற்றச்சாட்டாகும். 1987 டிசம்பர் மாதம் இறுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அந்நிய நாட்டைச் சார்ந்தவர்கள், இந்தியாவின் போர் கப்பலில் 10 நாட்கள் உல்லாசமாக தங்கலாமா என்பது முதன்மையான கேள்வி.
திருவாளர் ராஜீவ் காந்தியின் மனைவி திருமதி சோனியா உறவினர்கள் இத்தாலியர்கள் என்பதும் தெரியாமல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை விமர்சனம் செய்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட கப்பற் படை தளபதி ராமதாஸ், காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கி ஆதரவு தெரிவித்து சுட்டுரை எழுதியுள்ளார். ஐ.என்.எஸ். விராட் கடற்படை கப்பலை ராஜீவ் காந்தி தனது சொந்த டாக்ஸி போல குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க பயன்படுத்தியதாக முன்னாள் கடற்படைத் தளபதிகள் திரு.வி.கே.ஜெட்லி மற்றும் ஹரிந்தர் சிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
ஆனால் ஐ.என்.எஸ். விராட் போர் கப்பலின் பொறுப்பாளர் நேவி கமான்டர் வி.கே. ஜெட்லி, Rajiv and Sonia Gandhi used INS Viraat for travel to celebrate their holidays at Bangaram island. Indian Navy resources were used extensively. I am a witness. I was posted on INS Viraat that time. என தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். கடற்படை தளபதி அறையில் ராஜீவ் குடும்பத்துக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. துணைத் தளபதியாக இருந்த பஸ்ரிச்சா எங்கள் மேலதிகாரியாக இருந்தார், கப்பலில் வெளிநாட்டவரும் இருந்தனர். இது பஸ்ரிச்சாவுக்கும் நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
அதே கப்பலில் பணியாற்றிய லெப்டின்ட் கமான்டர் ஹரிந்தர் சிக்கா டைம்ஸ் நௌ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், that the Gandhis using naval resources was not appreciated by the naval officers but they were forced ro remain quiet. We were helpless because we could not speak or raise objections. They would have booked us for mutiny என குறிப்பிட்டுள்ளதையும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் படித்து விட்டு, மோடியின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தலாம். இவர் மேலும் கூறியது, பிரதம மந்திரி போர்க் கப்பலில் பயனக்க தடையில்லை. ஆனால் அவரது மனைவி அந்நிய நாட்டைச் சார்ந்தவர் கப்பலில் முக்கியமான தகவல்கள் உள்ளன. கப்பலின் உள்ளே கப்பற் படை அதிகாரிகளே செல்ல அனுமதியில்லை, அப்படிப்பட்ட உத்திரவு உள்ள நிலையில் இவர்கள் விடுமுறையை கழிக்க போர்க் கப்பலை பயன்படுத்தியது தவறான முன் உதாரணமாகும்.