கேரளாவில் 21 வயது இளம்பெண் மேயரானார். தங்கள் வேட்பாளர் தோல்வி அடைந்ததால் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட மேயர் தொகுதியை அந்த இளம் பெண்ணுக்கு வேறு வழி இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது என்பதே இந்த நிகழ்வின் பின்னணி. ஆனால் அந்த இளம் பெண்ணை குறித்து எழுதும் பத்திரிகைகள், பெண்ணியம் பேசுவோர், சமூக நீதி போராளிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அதே கேரளாவில், பெண்களுக்கு என ஒதுக்கப்படாத பந்தளம் பொது வார்டில், பா.ஜ.க, பட்டியல் இன பெண்மணியான சுசிலா சந்தோஷை நிறுத்தியது குறித்தோ, அவர் அமோக வெற்றி பெற்று நகராட்சி தலைவரானது குறித்தோ வாய் திறக்க மறுக்கின்றனர்.