தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகபெருமானை இழிவுபடுத்திய இந்த வீடியோ, கோடான கோடி தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் , பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன . பாரதீய ஜனதாவின் வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ் அளித்த புகாரின் பேரில் சுரேந்திரன் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலை நடத்தி வந்த வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், செருனை போரூரில் காதல் மனைவி கிருத்திகாவுடன் வசித்து வந்த சுரேந்திரன் , முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினான் , முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் , வீடியோவில் விஞ்ஞானி போல ஊருக்கே கருத்துச் சொன்ன கருப்பர் கூட்டம் நாத்திகன நடுக்கம் அடைந்து, எதிர்ப்புகளுக்கு அஞ்சி தமிழகத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் . தப்பிச் செல்லும் போது தன்னை யாரும் அடையாளம் கண்டுக் கொள்ளக்கூடாது என்பதற்காக தன்னுடைய தாடியையும் மீசையையும் மழித்துக் கொண்டு , புதுச்சேரிக்கு சென்று , தி.க மாணவர் கூட்டமைப்பு மற்றும் பெரியார் தி.க ஆதரவாளர்களுடன் பதுங்கி இருந்த சுரேந்திரன் , வியாழக்கிழமை , அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு சென்று சரண அடைய வந்திருப்பதாக தெரிவித்தான , இதுகுறித்து , புதுச்சேரி போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு காத்திருந்த நேரத்தில் தன்னை போராளி போல காட்டிக் கொண்ட சுரேந்திரன் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தான். ஆனால் , அடுத்த நொடியே அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டதால் சர்ச்சை உருவானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நடுரோட்டில் தீவைத்து எரித்தனர். அதனைத்தொடர்ந்து , விசாரணைக்காக தமிழக போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட சுரேந்திரன் அங்கிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.