சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. *முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும். *இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும். *மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும். *நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும். *ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும். *ஆறாம் படி காமத்தை கட்டபடுவத்துவதை குறிக்கும் *ஏலாம் படி குரோதத்தை குறிக்கும் *எட்டாம் படி பேரார்வத்தைவதை குறிக்கும் *ஒன்பதாம் படி மோகத்தை குறிக்கும் *பத்தாம் படி போட்டியை குறிக்கும் *பதினோராம் படி பொறமையை குறிக்கும் *பதிரெண்டாம் படி தற்பெருமையை குறிக்கும் *ஆறில் இருந்து பதிமூன்று வரை உள்ள எட்டு படிகளும் அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும். *பதினான்காம் படி சாத்வீகம் என்பதை குறிக்கும். *பதினைந்தாம் படி ராஜஸம் என்பதை குறிக்கும். *பதினாறாம் படி தாமஸம் என்பதை குறிக்கும். *பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும். *பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக்கும். மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.