கர்னல் சாகிப் முஷ்டாக்கி என்ற பாகிஸ்தான் இராணுவ அதிகாரி, ஐ. நா பாதுகாப்பு அமைதி படையில் பணியில் உள்ளார். இவர், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பணியாற்றுகையில் அங்குள்ள ஐ.நா. மிஷன் ஊழியர்களை முஸ்லிமாக மாற்ற கட்டாயப்படுத்தியுள்ளார். இது குறித்த ஊழியர்களின் புகாரையடுத்து, ஐ.நா தலைமையகம், விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் படைப்பிரிவினர், கிழக்கு காங்கோவில் வடக்கு கிவு, இடூரி பிராந்தியங்களில் பல மசூதிகளை கட்டியுள்ளதாக அந்த நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2012ல் ஹைத்தி தீவில் பாலியல் குற்றச்சாட்டு, பாகிஸ்தான் தூதர் முனீர் அகமது மீது வன்முறை குற்றசாட்டு என பாகிஸ்தான் படையினர் மீது கடந்த காலங்களில்கூட இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.