எரிசக்தி பற்றாக்குறையை சமாளித்த பாரதம்

உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் நீர்வழிப் பாதையை, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ல், ஈரானிய படைகளால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. உலகின் கடல் வழி கச்சா எண்ணெயில், சுமார் ஐந்தில் ஒரு பங்கும், திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) கிட்டத்தட்ட 60% இறக்குமதி செய்கிறது. இந்த நெருக்கடிக்கு முன்பு, பாரதத்திற்கு தேவையான கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட பாதியும், எல்.பி.ஜி இறக்குமதியில் 90 சதவீதமும், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் வழித்தடங்களையே சார்ந்து இருந்தன. இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட எரிபொருள் நெருக்கடி ஒருபோதும் ஏற்படவில்லை. பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கின. நாடு முழுவதும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் தொடர்ந்து கிடைத்தன. சர்வதேச சந்தைகள் 25 முதல் 30 சதவீதம் வரை விலை உயர்வை சந்தித்தது. இடையூறுகளை தாங்கும் அவசரகால நடவடிக்கையின் கச்சா எண்ணெய் கொள்முதலில், விநியோகஸ்தர்கள் 27 நாடுகளிலிருந்து 41 நாடுகளாக விரிவடைந்தது.
கயானா, காபோன் போன்ற உற்பத்தியாளர்களை கொள்முதல் வளையமைப்பிற்குள் கொண்டு வந்தது. நாட்டின் சுத்திகரிப்பு துறையும், முக்கிய சொத்தாக உருவெடுத்தது. பாரதம் ஆண்டுக்கு 25.68 கோடி டன்கள் சுத்திகரிப்புத் திறனை உருவாக்கியது. பாரதம் தனது நகர எரிவாயு விநியோக விலை அமைப்பை 2014ல், 55 புவியியல் பகுதியில் இருந்து 2026 ஆம் ஆண்டு 300க்கும் அதிகமாக விரிவுபடுத்தியது. இது குழாய் மூலம் இயற்கை எரிவாயு கிடைப்பதை கணிசமாக விரிவுபடுத்தியது மற்றும் பல நகர்ப்புற மையங்களில் எல்.பி.ஜி மீதான சார்பு நிலையை குறைத்தது.
சர்வதேச சந்தைகள் பெருகி நிலையற்றதாக மாறியதால், பாரதம் தடையற்ற உள்நாட்டு எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த கொள்கை மேற்கொண்டது. நெருக்கடி ஏற்பட்ட சில நாட்களுக்குள், பாரதம் அத்தியாவசியப் பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்திக்கு திருப்பி விட அனுமதிக்கும் எல்.பி.ஜி கட்டுப்பாட்டு உத்தரவை அறிமுகப்படுத்தியது. ஒரு வாரத்திற்குள் ஒரு நாளைக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 36 ஆயிரம் டன்களில் இருந்து கிட்டத்தட்ட 54 ஆயிரம் டன்களாக அதிகரித்தது.
2026 பிப்ரவரிக்கு பிற்பகுதிக்கும், மே தொடக்கத்திற்கும் இடையில் பெட்ரோல் விலை சுமார் 19 சதவீதம் அதிகரித்தது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டீசல் விலை 85 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. பாரதம் சுமார் எட்டு சதவீத மிதமான அதிகரிப்பை மட்டுமே அனுமதித்தது. வீட்டு உபயோக
எல்.பி.ஜி 14.2 கிலோ உள்நாட்டு
எல்.பி.ஜி சிலிண்டர் இறக்குமதி சார்ந்த விலை 1,600 ரூபாய் தாண்டிய போதிலும், நுகர்வோருக்கான சில்லரை விலை ரூபாய் 942 ஆக பராமரிக்கப்பட்டன. 33 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு சுத்தமான சமையல் எரிபொருளுக்கான தடையற்ற விநியோகத்தை மத்திய அரசு உறுதி செய்தது.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக சுமார் 2,50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஏலம் விட, பாரதம் தயாராகி வருகிறது.
2025−26 ஆம் ஆண்டில் 25.98
மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்தது. கடல் சார் ஆய்வுகள் விரிவுபடுத்த ‘சமுத்ரா மந்தன்’ திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையை குறைத்து, சுமார் 1.36 லட்சம் கோடி அந்நிய செலவாணியையும் சேமிக்கிறது. விவசாயக் கழிவுகள் மற்றும் நகராட்சிக் கழிவுகளை பயன்படுத்தி, அழுத்தப்பட்ட உயிரி வாயு உற்பத்தியை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. அதேசமயம் விமான எரிபொருள் திட்டங்கள், தொழில்துறை கரிய மீன் வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கும், எதிர்கால எரிசக்தி பாதுகாப்பிற்கும், புதிய பாதைகளை உருவாக்கி வருகின்றன.
ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலை லிமிடெட் தொடக்க விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசுகையில், “சரியான நேரத்தில் செய்யப்பட்ட மதிப்பீடு, தீர்க்கமான கொள்கை வகுத்தல், உள்நாட்டு வளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் ராஜதந்திரக் கூட்டமைப்பை ஆக்கபூர்வமாக பயன்படுத்துதல் ஆகியவற்றின் விளைவு என்று விவரித்தார். உலகளாவிய விலை உயர்வுகளின் முழுமையான தாக்கத்திலிருந்து நுகர்வோரையும், விவசாயிகளையும் பாதுகாத்தது என்றும், நிதி சுமைகள், வதந்திகளை பரப்பியவர்கள் குறித்தும்” அவர் குறிப்பிட்டார்.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்