ஆலயத் திருப்பணி நிறைவுற்று கும்பாபிஷேகமும் சோமனாதர் சிவலிங்க பிரதிஷ்டையும் 1951 மே மாதம் 11ந்தேதி நடந்தது. அப்போது வல்லபாய் படேல் அவர்கள் உயிருடன் இல்லை. அவரது ஆசை சோமனாதபுரம் ஆலயம் கும்பாபிஷேகத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் நடத்தவேண்டும் என்பதாகும். எனவே கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள நாட்டின் முதல் ராஷ்ட்ரபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் சொல்வதென முடிவு செய்தார்.
மசார்பற்ற அரசின் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரஸாத் அவர்கள் அவ்விழாவிற்குச் சென்றால் முஸ்லிம்கள் கோபம் கொள்வர் என்று மௌலானா அபுல் கலாம் ஆஸாத் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களிடம்
கூறினார். சோமனாதபுரம் ஆலய கும்பாபிஷேக விழாவிற்குச் செல்ல வேண்டாம் என நேரு அவர்கள் பாபு ராஜேந்திரபிரஸாத் அவர்களிடம் கூறினார். ஆனால் ராஷ்ட்ரபதி அவர்கள் நேருவிடம் ‘‘என்னை எனது கலாச்சார தார்மீக பாரம்பரியத்திலிருந்து பிருத்துக் கொள்ள முடியாது’’ என்று கூறி, நேருவை மீறி சோமனாதபுரம் ஆலய விழாவிற்குச் சென்றார். அந்த ஆலயம் இன்று விண்ணுயர்ந்து நிற்கிறது.
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது
டாக்டர். ராஜேந்திர பிரசாத் டிசம்பர் 3 பிறந்த நாள்