ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதிய “பிராந்த பிரசாரக் பைட்டக்” இந்த ஆண்டு ஜூலை 13-, ௧௪, 15 தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நிகழ்கால பிரச்சினைகளை விவாதிக்க கூட்டப்படும் வருடாந்திர கூட்டமாகும்.
இந்த சந்திப்பில், அகில பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபளே மற்றும் துணை பொதுச் செயலாளர்கள் மன்மோகன் வைத்யா, சி.ஆர். முகுந்த், அருண் குமார், ராம்தத் ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள். இதில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநில பிரச்சாரகர்களும், மாநில துணை பிரச்சாரகர்களும், தென்பாரத பிரச்சாரகர்களும், தென்பாரத துணை பிரச்சாரகர்களும், அகில பாரத ஏழு அமைப்பு பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான சங்க நூற்றாண்டு செயல் திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட
முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படும்.
சமூக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள். அடுத்த 4, 5 மாதங்களுக்கான செயல் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். என்று அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்தார்.