‘இல்லத்தரசிகளுக்கு சம்பளம்’ எனும் புரட்சி திட்டத்தை அறிவித்த கமல் மேடைதோறும் அதை பேசி வருகிறார். இதனை செயல்படுத்தினால், இல்லத்தரசி என்பவர் வீட்டு ஊழியர் எனும் நிலைக்கு தள்ளப்படுவார். இது கணவன் மனைவி இடையே அன்யோனியத்தை குறைக்கும்’ என கங்கனா ரனாவத் குறைகூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 2015ல், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகைக்கு, கமலின் முன்னாள் மனைவி வாணி கணபதி அளித்துள்ள பேட்டியில், ‘விவாகரத்துக்கு பிறகு கமல் தான் பயன்படுத்திய வீட்டு பொருட்களைகூட தர மறுத்துவிட்டார்’ என குற்றம்சாட்டியுள்ளார். தன் முதுகில் வண்டி வண்டியாக அழுக்கை வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைகூறும் இவர் எப்படி நலாட்சி தருவார் என மக்கள் கருதுகின்றனர்.