பொய்கூறும் ஸ்டாலின்

எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என, மத்திய மாநில அரசுகள் குறித்து வேண்டுமென்றே பல பொய்களை தினமும் கூறிவருகிறார் ஸ்டாலின். அந்த வகையில், சமீபத்தில், வேளாண் சட்டங்களை குறித்து சற்றும் உண்மையில்லாத, தவறான தகவல்களை கிராம சபைகளில் பரப்பி வருகிறார்.
அந்த வகையில் ஸ்டாலின் கூறிய பொய்களில், “MSP எனபடும் குறைந்தபட்ச ஆதரவு விலை நீக்கப்படும், அரசாங்கம் எல்லா நிலங்களையும் பணக்கார முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விற்க சதி செய்து வருகிறது, விவசாயிகள் தங்கள் விலைகளை நிர்ணயிப்பதில் பாதிப்படைவார்கள், வாங்குபவர்கள் விவசாயிகளை சுரண்டுவார்கள், விவசாயிகள் சந்தை ஏற்ற இறக்கங்களின் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்”. போன்றவை சில.
ஆனால், இந்த கருத்துகளில் எள் அளவும் உண்மை இல்லை என்பதுடன், கடந்த 2016 தேர்தலில் இவற்றையெல்லாம் நடைமுறைபடுத்து வோம் என சொல்லி ஓட்டு கேட்டவர்களே இந்த தி.மு.க காங்கிரஸ் கூட்டணியினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.