இந்து முன்னணி செயற்குழு

இந்துமுன்னணி அமைப்பின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று துவங்கியது. இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். புதுச்சேரி கோட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆடிட்டர் செல்வராஜ் திருவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநில, கோட்ட பொறுப்பாளர்கள் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு, தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளதாக தெரிகிறது.