13-வது தெற்காசிய விளையாட்டு நேபாளத்தில் நடைபெற்று வரு கிறது. இதன் 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங் கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர்.
ஆடவருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் கிரிபால் சிங் 57.99 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ககன்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். மகளிர் பிரி வில் இந்தியாவின் நவ்ஜீத் கவுர் தங்கப் பதக்கத்தையும், சுரபி பிஸ்வாஸ் வெள்ளிப் பதக்கத் தையும் வென்றனர்.
ஆடவருக்கான நீளம் தாண்டு தலில் இந்தியாவின் லோகேஷ் சத் யன் தங்கமும், சுவாமிநாதன் ராவ் வெள்ளியும் வென்றனர். மகளிருக் கான நீளம் தாண்டுதலில் இலங் கையைச் சேர்ந்த லக்சினி சாரங் (6.38 மீட்டர்) தங்கப் பதக்கமும், அன்ஜனி உத்தபலா (6.11) வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் சந்திரா பாபு (6.02) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அர்ச்சனா சுசீந்திரன் பந்தய தூரத்தை 23.66 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பாகிஸ்தானின் நஜ்மா பர்வீன் (23.69) வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் சந்திரலேகா (24.27) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சுரேஷ் குமார் பந்தய தூரத்தை 29.33.61 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் இலங்கையின் சண்முகேஷ்வரன் (30.49.30) வெள்ளிப் பதக்கமும், நேபாளத்தின் தீபக் (30.50.06) வெண் கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
கலப்பு தொடர் ஓட்டத்தில் பிரக் னியா மோன், விஷ்வர்ஜித் சாய் கோம், சரோஜினி தேவி, எம்.எம். ஆதர்ஷ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 1:35:20 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது. நேபாள அணி (1:38:28) வெள்ளிப் பதக்கமும், இலங்கை அணி (1:41:21) வெண் கலப் பதக்கமும் கைப்பற்றின.
டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், அந்தோனி அமல்ராஜ் ஜோடி 8-11, 11-7, 11-7, 11-5, 8-11, 12-10 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சுனில் ஷெட்டி, சுதான்ஸு குரோவர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மதுரிகா பட்கர், ஜா அகுலா ஜோடி 2-11, 11-8, 11-8, 11-6, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த சுதிர்தா முகர்ஜி, அஹிகா முகர்ஜி ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், சுதிர்தா முகர்ஜி ஜோடி 11-6, 9-11, 11-6, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் சகநாட்டின் அமல் ராஜ், அஹிகா முகர்ஜி ஜோடியை தோற்கடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
நீச்சல்:
நீச்சல் போட்டியில் 200 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் லிகித் செல்வராஜ் பிரேமா தங்கமும், தனுஷ் சுரேஷ் வெள்ளியும் வென்றனா். ஆடவா் 200 மீ பிரெஸ்ட் ஸ்டோா் குறுகிய பிரிவில் அபெக்ஷா பொ்னான்டஸ் தங்கம் வென்றாா். மகளிா் 100 மீ பட்டா்பிளை குறுகிய பிரிவில் திவ்யா தங்கம் வென்றாா். மகளிா் 400 மீ ப்ரீஸ்டைல் அணிப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா.
டேக்வாண்டோவிலும் மகளிா் பிரிவில் பூா்வா, ருச்சிகா பாவே, மாா்க்கரெட் மரியா தங்கமும், ஆடவா் பிரிவில் நீரஜ், அக்ஷய் ஹூடா வெள்ளியும், லக்ஷயா வெண்கலமும் வென்றனா்.
பதக்க பட்டியல்..
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை நிலவரப்படி 62 தங்கம், 41 வெள்ளி, 21 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது இந்தியா.