பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த வெள்ளிக்கிழமை சிவசேனா என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொல்லப்பட்டதை என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தேசிய செயற்குழு உறுப்பினரும், ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் அமைப்பின் தலைவருமான இந்திரேஷ் குமார் கண்டித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், “இது கண்டிக்கத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. பாரதம் ஒன்றுபட்டுள்ளது, துண்டு துண்டாக பிரிக்க நினைக்க வேண்டாம். இந்த தாக்குதல் பஞ்சாபியத் மீது நடத்தப்பட்ட தாக்குதல். மத்திய அரசு இதில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.