ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் படுகொலை: கேரள மார்க்சிஸ்டுகளின் கோர தாண்டவம்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அன்பர்களைக் குறிவைத்து கொலை வெறித் தாண்டவமாடுகிறது மாநில ஆளும் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி. மாநில முதல்வர் பிணராயி விஜயனே முன்பு ஒரு அரசியல் கொலையில் சம்பந்தப்பட்டவர்தான். மாநில மார்க்சிஸ்ட் செயலர் கொடியேரி பாலகிருஷ்ணன் கொடிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருகிறார்.

கேரளத்தில் உள்ள ‘கட்சி கிராம’ங்களுக்குள் மார்க்சிஸ்டுகளைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. ஆனால் ஒரு ‘கட்சி கிராம’த்திற்குள் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பு (N.I.A) கைது செய்துள்ளது. அதாவது ஜிகாதி பயங்கரவாதிகளுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் கேரளத்தில் பலமான உறவு உள்ளது. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் கூட இந்த உறவு காணப்படுகிறது. கேரளத்தில் கண்ணூரில் தொடங்கிய மார்க்சிஸ்டு கொலைவெறி வன்முறை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

பிணராயி அரசு வந்த பிறகு கடந்த 12 மாதங்களில் 13 ஸ்வயம்சேவகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அண்மையில் திருவனந்தபுரத்தை அடுத்த எடவாகோடு பஸ்தி கார்யவாஹ் 34 வயது எஸ்.எல். ராஜேஷ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது கேரளத்தின் கொலைகார அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கொலை செய்யப்படும் ஸ்வயம்சேவகர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவர்கள். நடப்பது ஆர்.எஸ்.எஸ். மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது மனித உரிமைகள் மீதான தாக்குதல். இந்த தேசத்திற்குரிய ஜனநாயகப் பண்பின் மீதான தாக்குதல். இந்தப் போக்கு குறித்து மத்திய அரசும், மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனம் செலுத்தி அரசியல் சாஸன ரீதியிலான தகுந்த நடவடிக்கை எடுத்து ‘கடவுளின் மாநில’மான கேரளத்தை கம்யூனிச இஸ்லாமிய வெறித்தனத்தின் சகிப்பற்ற, வன்முறை சித்தாந்தத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

(டில்லியில் ஆகஸ்ட் 4 அன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபலே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களில் சில)

 

**********************************************************************

கோவையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்?

கடந்த செவ்வாய் அன்று இரவு கோயம்புத்தூர் ஆஜாத் நகரிலும் கோட்டை புதூரிலும் மத்திய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) அப்துல்லா, அப்துல் ரகுமான் என்ற இரண்டு பேரின் வீடுகளில் சோதனை செய்ததில் அவர்கள் தடைசெய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இவர்களின் முகநூல் பதிவுகளை என்.ஐ.ஏ தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

 

**********************************************************************