கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் கூட்டாக நம் தேசத்து வரலாற்றை மாற்றும் முயற்சி செய்துவருவது உலகறிந்த ரகசியம். அதில் ஒரு பகுதியாக, கேரளாவின் 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அறுவைசிகிச்சை முறையைக் கண்டறிந்தவர் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறுவைசிகிச்சையின் தந்தை என அபு அல் காசிம் அல் ஜவாரி என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அம் ஜவாரி, சில அறுவைசிகிச்சை உபகரணங்களை வரைந்து வைத்ததாகவும் அவற்றைக் கொண்டு அறுவைசிகிச்சைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நம் பண்டைய பாரத தேசத்து மருத்துவர் சுஷ்ருதர் காசி ராஜ்ஜியத்தில் வாழ்ந்த சுஷ்ருதர். இவர் தனது ‘சுஷ்ருத சம்ஹிதா’ என்ற நூலில் தான் மேற்கொண்ட பல அறுவைசிகிச்சைகள் குறித்து விளக்கமாக எழுதியுள்ளார். இவர்தான் அறுவைசிகிச்சை முறையின் தந்தை என்பது உலகிற்கே தெரியும். இவர் அல்-ஜவாரிக்கும் முன்னர், 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.