ஓ.டி.டிக்கு கடிவாளம்

ஓ.டி.டி தளங்களான நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற நிறுவனங்கள், இணையம் வழியாக, திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அவற்றை கட்டணம் செலுத்தி சுமார் 20கோடி பேர் பார்க்கின்றனர். இந்நிறுவனங்கள் வெளியிடும் திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றில் ஆபாச காட்சிகள், தேச துரோக காட்சிகள் இடம் பெறுவதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. ஓ.டி.டி தளங்களையும் வலைதள செய்தி நிறுவனங்களையும் கட்டுப்படுத்த, தனியாக சட்டங்கள் இல்லை. எனவே, இவற்றை முறைப்படுத்த தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை உருவாக்கி வருகிறது.