அமெரிக்காவின் ஹூஸ்டனில் 2023 ஜூன் மாதத்தில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் மன்றம் (Council on American- Islamic Relations – CAIR) தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய இரண்டு அமெரிக்க மாநிலங்களும் இந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளான ஹமாஸ், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவம் போன்ற அமைப்புகளுடன் CAIR தொடர்புடையதாக அதன் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஹிந்து மதத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் அந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில், இந்த அமைப்பை அமெரிக்காவின் இரண்டு மாநிலங்கள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சென்றபோது CAIR போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களுடன் அவர் ஒரே மேடையில் பங்கேற்றதால் , பயங்கரவாதத்திற்கு ஆதரவானவராகவே அவர் பார்க்கப்படுகிறார். CAIR அமைப்பு பல ஆண்டுகளாக, ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாகவும், ஹிந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரங்களை ஆதரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “உலகளாவிய ஹிந்துத்துவாவை அகற்றுதல்” என்ற பெயரில் நடத்தப்படும் மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளித்ததன் மூலமும், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.
2022 ஜனவரியில், CAIR அமைப்பு, பயங்கரவாதி ராணா அய்யூப்பின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரத்தை ஆதரித்தது. பாலிவுட் திரைப்படமான சூர்யவன்ஷி திரைப்படத்தை “ஆபத்தானது”, “பாசிசமானது” என்று விமர்சித்து, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியது. மேலும், அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் FBI அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில் தண்டிக்கப்பட்டு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தானியரான ஆஃபியா சித்திக்கியை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும், இந்த அமைப்பு தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. 2022 டிசம்பரில், நியூஜெர்சியில் 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த தகவல்களை மட்டுமே கொண்டிருந்த நடமாடும் விளம்பரப் பலகையை CAIR அமைப்பு விமர்சித்தது. அந்த விளம்பரப் பலகை வெறுப்பைத் தூண்டுவதாகவும் அது கூறியது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஹமாஸுடன் CAIR அமைப்புக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்தும், சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், CAIR அமைப்புடன் தொடர்புடையவர்களுடன் ராகுல் காந்தி கொண்டுள்ள தொடர்புகள், அவரது அரசியல் அணுகுமுறை மற்றும் சித்தாந்த நிலைப்பாடுகள் அவரை இந்தியாவுக்கு எதிரானவராகவே காட்டுகிறது! *