இந்து முன்னணியின் மாநில நிறுவன அமைப்பாளர் மரியாதைக்குரிய ராம.கோபாலன் நேற்று தனியார் மருத்துவமனையில் காலமானார். 1947ல் தேசப்பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து ஹிந்து அகதிகள் பாரதத்திற்கு விரட்டப்பட்டபோது அவர்கள்
நாடெங்கிலும் தஞ்சமடைந்தனர்.
அவர்களில் ஒரு குழுவினர் சென்னை ஆவடியில் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அந்த முகாமுக்கு சென்றிருந்த கோபால்ஜி சக ஹிந்துக்களின் தவிப்பை கொடுமையை காண சகியாது ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்தார்.
பி.இ. படித்து மின்சாரத் துறையில் பணியிலிருந்த அவர் அந்த அரசுப்பணியை துறந்து ஆர்.எஸ்.எஸ்ஸில் முழுநேர ஊழியராக மாறினார்.
1980 வரை தமிழகத்தின் முன்னணி நகரங்களில் பணியாற்றிய ராமகோபாலன், சூரிய நாராயண ராவ் அவர்களின் தமிழக வருகைக்குப் பின் துணை அமைப்பாளராக இருந்து செயல்பட்டார்.
1980 களில் தமிழகத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச ஒரு இயக்கம் தேவைப்பட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் இணையமைப்பாளராக பணிபுரிந்த ராம.கோபாலன் இந்து முன்னணிக்கு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து முன்னணியை வளர்த்தெடுத்தவர். அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாதது.
அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
- வேலூர் ஜலகண்டேஸ்வரர் சிலை பிரதிஷ்டை.
- மீனாட்சிபுரம் மதமாற்றம் தடுப்பு.
- கன்னியாகுமரி பெயர் மாற்றத்தை தடுத்தது.
- வீதிதோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.
- தனுஷ்கோடியில் லட்சம் பேர் கலந்துகொண்ட ராம நாம ஜபவேள்வி.
- திருவாரூரில் ஓடாத தேரை ஓட வைத்தது.
- ஊர்தோறும் பண்பாட்டு வகுப்பு.
- நீலகிரி – எருமாடு, சிவன்கோயிலை மீட்டது.
- பல கோயில் நிலங்கள் மீட்பு.
- ராமர் பாலம் இடிப்பு தடுப்பு.
- மீடியாக்களின் ஹிந்து விரோத போக்கை தடுத்தது, மற்றும் பல சாதனைகள்.