குரோம் டி.எம் எனும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் ரிபப்ளிக் தொலைக்காட்சி நாட்டில் அதிகம் பார்க்கப்படக்கூடிய தொலைக்காட்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் சமூக ஊடகங்களிலும் ரிபப்ளிக் அதிகம் ஈடுபட்டுள்ளது. 2017ல் 61 சதவீதமாக இதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 2020ல் 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் மக்களால் அதிகம் பார்க்கப்படும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் 65 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரிபப்ளிக் தொலைகாட்சியை ஒழிக்கும் நோக்கில், மகாராஷ்டிர அரசு டி.ஆர்.பி வழக்கில் பொய்யாக ரிபப்ளிக் தொலைக்காட்சியை சிக்க வைத்தது நினைவிருக்கலாம்.