பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பேசிய மாணவர் சங்கத்தலைவர் ஃபர்ஹான் ஜுபேரி ‘நபிகள் நாயகத்துக்கு எதிராக யாராவது பேசினால் தலையை துண்டிப்பேன்’ என்றார்.
மேலும் சமூக அமைதியை கெடுக்கும் பல கருத்துகளையும் கூறினார். இதற்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உ.பி ஷியா வஃப் வாரியத்தலைவர் வாசிம் ரிஸ்வி ஃபர்ஹானின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத சித்தாந்தத்தால் நபியை நீங்கள் அவமதிக்கிறீர்கள். இதை தான் நபிகள் உங்களுக்கு கற்பித்தார் என உலக மக்கள் தவறாக நினைக்க தூண்டுவதாக உங்களின் பேச்சு அமைந்துள்ளது என கூறியுள்ளார்.