கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் பல்வேறு முயற்சிகள் குறித்த விவரங்களைப் பிரதமர் நரேந்திரமோடி பகிர்ந்துள்ளார். நமோசெயலி, மைகவ் போன்ற இணைய தளங்களில் இருந்து இந்த முயற்சிகளை இணைக்கும் கட்டுரைகளையும் டுவிட்டர் பதிவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். பிரதமர் டுவிட்டரில், “பாரதத்தின் இளைய சக்தி நமது மாபெரும் பலமாகும். நமது இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்; தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். இந்தக் கட்டுரைகள் இளைஞர் மேம்பாட்டிற்கான சில முக்கிய முயற்சிகளை இணைக்கின்றன. அரசில் எங்களின் 8 ஆண்டுகளில் இளைஞர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கவும், அவர்களின் ஆற்றலைப் பயன்படுத்தவும் முடிந்துள்ளது. இந்த இணைப்பில் அவற்றை காணுங்கள். நாட்டின் இளைஞர் சக்தி புதிய பாரதத்தின் ஆதார சக்தியாக உள்ளது, கடந்த எட்டு ஆண்டுகளில் அதை மேம்படுத்துவதற்கு நாங்கள் எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி, ஐ.ஐ.டிகள் மற்றும் ஐ.ஐ.எம்களின் விரிவாக்கமாக இருந்தாலும் சரி, புதிய தொழில்கள் மற்றும் யூனிகார்ன்கள் முதல் கேலோ இந்தியா மையங்கள் வரை, இளைஞர்களுக்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.