தமிழ் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கமத்திய அரசின் இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டம் பிரதமர் மோடியால் கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், மொழிக்கு தலா 10 பேர் வீதம் 230 எழுத்தாளர்கள், தேர்வுக் குழுவால் நேரடி தேர்வாக 20 பேர் என மொத்தம் 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேசிய புத்தகங்கள், கலாச்சார பறிமாற்றத் திட்டங்கள் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும். அவர்கள் எழுதும் புத்தகங்கள் தேசிய புத்தக அறக்கட்டளை வாயிலாக வெளியிடப்படும். சிறந்த புத்தகங்கள் பிற நாட்டு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும். இதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 1 முதல் துவங்குகின்றன. பங்குபெற விரும்புவோர், director@nbtindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.