மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசைப் பாராட்டியுள்ளது. மற்ற மாநிலங்களும் உத்தரபிரதேச அரசின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது. பெண்கள் சார்ந்த பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ என்ற ஒற்றை சாளர அமைப்பை உருவாக்குதல் போன்ற முயற்சிகளை இக்குழு பாராட்டியது. இதுவரை, இந்த மையங்களின் மூலம் சுமார் 1,04,859 பெண்கள் பயனடைந்துள்ளனர். இதில், புகார் அளிப்பவர்களுக்கு காவல்துறை உதவி, மருத்துவ சிகிச்சை, சட்ட உதவி, உளவியல் ஆலோசனை, தற்காலிக தங்குமிடம் போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படுகின்றன.