வங்கதேசம் தனி நாடாக உருவாகி, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சுதந்திர தின பொன் விழாவை, அந்நாட்டு அரசு கொண்டாடுகிறது. இதனையொட்டி, அந்த விழாவில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் பயணமாக டாகா சென்றுள்ளார். அங்கு, சக்திஹிரா மாவட்டம், ஈஸ்வரிபூர் நகரில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜெஸ்ஹோரேஸ்வரி காளி கோயிலுக்கு சென்றார். மோடிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடத்தை காளி தேவிக்கு சூட்டி வழிபாடு நடத்தி, தியானத்திலும் ஈடுபட்டார். பின்னர் கஷியானி உபஜிலா பகுதியில் உள்ள ஒரகண்டி கோயிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இந்த வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். அது தற்போது தான் நிறைவேறி உள்ளது என தெரிவித்தார்.