சட்டசபையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‘அ.தி.மு.க., ஆட்சியில், 2,000 இடங்களில் அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டது. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவற்றில் பணிபுரிந்த மருத்துவர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால், அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் திறக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.