கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மட்டுமே இயங்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்தியன் பேங்க் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது. இதேபோல் வங்கிகளில் மக்களுக்குத் தேவையான 4 அடிப்படை சேவைகள் மட்டும் இனி அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதன் வாயிலாகப் பணம் டெப்பாசிட், வித்டிரா, பணம் அனுப்புதல், அரசு சேவைகளுக்கான பணம் செலுத்துதல் ஆகிய சேவைகள் மட்டுமே இருக்கும். இதனால் மக்கள் முன்கூட்டிய திட்டமிட்டு சேவைகளைப் பெற வேண்டும். கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாகச் சுமார் 600 வங்கி ஊழியர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து வங்கி ஊழியர்களையும் விரைவில் கொரோனா தடுப்பு மருத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியன் பேங்க் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.