கஷ்டங்களுக்கு யார் காரணம்

நம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை.

சீதையை கடத்திய ராவனனை போர்புரிந்து வீழ்த்தினார் ராமர். இச்செய்தியை சீதையிடம் தெரிவிக்கஅனுமன் அசோகவனம் விரைந்தார். சீதையிடம் ராமனின் வெற்றியை கூறியவுடன் சீதை ஆனந்தம் கொண்டார்.

சந்தோஷமான செய்தியை கூறிய உனக்கு நான் ஏதேனும் வரம் தர விழைகிறேன். என்ன வரம் வேண்டும் கேள் ஆஞ்சிநேயா என்றார் சீதை. எனக்கு ஒருவரமும் வேண்டாம் தாயே. ஆனால் எனக்கொரு ஆசை. அதை நிறைவேற்ற நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றார் அனுமன். என்ன ஆசை சொல் என்றார் சீதை.

உங்களை இங்கு பாடாய் படுத்திய அரக்கிகளைம் நான் இப்பொழுதே தீயில் இட்டு மடிய செய்ய விரும்புகிறேன் என்றார்.

சீதையின் முகம் மாறியது. நீ நினைப்பது தவறு அனுமன். அவர்கள் என்னை துன்புறுத்தியது உண்மைதான்; என்றாலும் அதற்கு காரணம் நான் தான். நான் செய்த சில கொடிய செயல்களின் பலனாகவே அந்த துன்பங்களை நான் அனுபவித்தேன் என்றார்.

நீங்கள் அப்படி என்ன கொடிய செயல்களை செய்தீர்கள் அன்னையே என்று அனுமன் வினவினார். நான் இங்கு வரும் முன்பு, பொன்மானாய் வந்த மாய மானை பிடித்து வரக்கூறி என் கணவரை அனுப்பினேன். அவர் நீண்ட நேரம் வராததாலும் லட்சுமணா என்று அபயக்குரல் எழுப்பியதாலும் நான் லட்சுமணனை சென்று அவரது அண்ணனை தேட சொன்னேன்.

ஆனால் அவரோ, அண்ணனிற்கு ஒன்று நேராது. நான் உங்களுக்கு காவலாக இங்கே இருப்பது முக்கியம் என்றார். ஆனால் நான் அவரை கடுஞ்சொற்களால் திட்டி விரைந்து செல்ல சொன்னேன்.

தன் கண்ணிமைபோல அவர் எங்களை பாதுகாத்தார். ஆனால் நான் அவரை அன்று என் வார்த்தைகளால் வருத்தமடைய செய்தேன். அதன் காரணமாகவே அரக்கிகள் என்னை துன்புறுத்தினர் என்றார் சீதை.

 

ஜெகன்