73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகள் இடம்பெற்றன. இதில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி, வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களுடன் கூடிய ஊர்திகள் இடம்பெற்றன. இதில் ஒன்றில் “பாரதத்திற்கு சுதந்திரம் தரக்கூடாது. அப்படியே தந்தாலும் சென்னை மாகாணம் (அன்றைய தமிழகம்) ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்தான் இருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தில் இருந்துகொண்டே சென்னை மாகாணத்தை ஆளவேண்டும்” என தேசப்பற்று சிறிதும் இன்றி தீர்மானம் இயற்றிய திராவிட கழகத்தின் ஈ.வே ராமசாயின் சிலை இடம் பெற்றிருந்தது. இது திரிக்கப்படாத சுதந்திர வரலாற்றை அறிந்த மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க அரசின் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்தியது. இந்நிலையில், ஈ.வே ராமசாமி சுதந்திரத்தை மட்டுமா எதிர்த்தார்? இறைவனை எதிர்த்தார், ஆன்மிகத்தை எதிர்த்தார், தமிழை எதிர்த்தார், திருக்குறளை எதிர்த்தார், அவ்வளவு ஏன் அவர் அண்ணாதுரையையும் அவர் தோற்றுவித்த தி.மு.கவையும்கூட எதிர்த்தார். ராமசாமியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தவர் கருணாநிதி. அவருடைய சிலையை அலங்கார அணிவகுப்பு ஊர்தியில் தி.மு.க அரசு ஏன் வைக்க வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.