அண்ணாமலை வரவேற்பு

கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து மாவு குறித்த ஊழல் புகாரால் தற்போது டெண்டர் மாற்றி வழங்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை. கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக தமிழக பா.ஜ.க பட்டியல் வெளியிட்டது. அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நாங்கள் அளித்த புகாரையும் அறிவாலய அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஆவின் ஹெல்த் மிக்ஸ்சின் நிலை என்ன என்பதையும் தி.மு.க அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.