உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் உடல் ஊனமுற்றவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை முஸ்லிம் அமைப்பினர் ஏமாற்றி, ஆசை காட்டி மதமாற்றம் செய்த சம்பவம் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், தேசத்தின் பல்வேறு இடங்களில் சிறுமியர், பெண்கள் ஏமாற்றப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு திருமணம் என்ற பெயரில் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். கொரோனா பொதுமுடக்க காலத்தில் சேவை என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ மிஷனரிகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஏராளமான நிடியுதவி பெற்று, அதனை மதமாற்றத்திற்காக பயன்படுத்துகின்றனர். இதற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, பாரதத்தில் உள்ள ‘டூல் கிட்’ கும்பல்கள் உட்பட பல வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளும் உதவி புரிகின்றன. எனவே, லவ் ஜிஹாத், ஏமாற்றுதல், கட்டாயப்படுத்துதல் என அனைத்து வகையிலும் இவர்கள் மக்களை மதமாற்றம் செய்வதை தடுக்க, நியோகி கமிஷன் இதனை விசாரிக்க வேண்டும். நியோகி கமிஷன், வேணுகோபால் கமிஷன் பரிந்துரைத்த மதமாற்றத் தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், தேசம் மதத்தின் பெயரால் பிளவு படாமல் காக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.