கடந்த சில வருடங்களாகவே ஹிந்துக்கள் பண்டிகையின்போது மதவாத முஸ்லிம் அமைப்பினர் சிலர், திட்டமிட்ட வகையில் பயங்கரவாத, வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில், இந்த வருடமும் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட வகையில் கலவரங்கள் நடத்தப்பட்டு உள்ளன. ஹிந்துக்கள் தாக்கப்பட்டு உள்ளனர். ராம நவமியை முன்னிட்டு மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட ப்குதிகளில் மதவாத மோதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
ஹௌராவில் வன்முறை: மேற்கு வங்க மாநிலம் ஹௌரா மாவட்டத்தில், ஸ்ரீராம நவமி பண்டிகையின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்களைச் சந்தித்தது, பின்னர் பல வாகனங்கள் எரிக்கப்பட்டன மற்றும் அப்பகுதியில் கடைகள் சூறையாடப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு வங்க காவல்துறையினர் ஹௌராவில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், 36 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காசிபாரா பகுதி வழியாக ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. முஸ்லிம்கள், சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி வந்தவர்கள் போன்றோர் மீது பாசம் காட்டும் மேற்குவங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி, வழக்கம் போல, இந்த முறையும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும்அவர், “ரம்ஜானின் போது, முஸ்லிம்கள் ‘அநீதி’ செய்ய மாட்டார்கள், இது அல்லாவுக்காக தியாகம் செய்யும் நேரம்” என்று அவர் வன்முறையில் இறங்கிய முஸ்லிம்களின் பங்கை இதில் நிராகரிக்க முயன்றார்.மேற்குவங்கத்தில் வகுப்புவாத கலவரங்களை நடத்துவதற்கு பிற மாநிலங்களை சேர்ந்த குண்டர்களை பா.ஜ.க வேலைக்கு அமர்த்துவதாக அவர் ஒரு அபாண்ட குற்றச்சாட்டையும் முன்வைத்தார். மூத்த பா.ஜ.க தலைவரும், மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, கலவரத்தைத் தூண்டும் மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வதோதராவில் கல்வீச்சு: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள பஞ்ச்ரிகர் மொஹல்லா அருகே, ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் மீது முஸ்லிம்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அறிக்கையின்படி, ஊர்வலத்தின் போது சுமார் 500 முஸ்லிம்கள், ஊர்வலம் மற்றும் ஹிந்து பங்கேற்பாளர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். இதில், முதல் சம்பவம் ஃபதேபுரா பகுதியில் பதிவாகியுள்ளது, 2வது சம்பவம் கும்பர்வாடாவில் நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) ஸ்ரீராம நவமி ஊர்வலத்தை பஞ்ச்ரிகர் மொஹல்லாவில் ஏற்பாடு செய்திருந்தது, இரண்டாவது ஊர்வலம் உள்ளூர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பா.ஜ.க சட்டம்னற உறுப்பினர் மனிஷா வக்கீலும் கலந்து கொண்டார். ஊர்வலம் ஹரணி காவல்நிலையப் பகுதியிலிருந்து புறப்பட்ட பின்னர் கற்கள் வீசப்பட்டது. உடனடியாக அதிரடிப் படையினர் இரண்டு கம்பெனிகள் அங்கு நிலைநிறுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். .
சம்பாஜி நகரில் 12 பேர் காயம்: மகாராஷ்டிர மாநிலம், சம்பாஜி நகரில் (முன்னாள் பெயர்: ஔரங்காபாத்), ஸ்ரீராமர் கோயில் அருகே விழாவுக்கான பணியில் ஈடுபடிருந்த ஹிந்துக்கள் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பணியாளர்கள் முயன்றபோது, சுமார் 500 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள், வெறித்தனமாக கற்கள் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசியதில் 10 காவலர்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் பதற்றம்: மும்பையின் மால்வானி பகுதியில் ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மால்வானியில் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, அப்பகுதி முஸ்லிம்கள் சிலர் அதிக ஒலி டி.ஜே இசைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலத்தில் வந்தவர்களை தாக்கினர். இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, கற்கள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது.