காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது கோயில் அர்ச்சகர்கள், கருவறைக்குள் சென்று மூலவரை தொட்டு பூஜை செய்ய கூடாது என தடுத்தனர். இதனால், அர்ச்சகர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் இணை ஆணையர், பா.ஜ.க. தலைவர் ஹெச். ராஜா, ராமேஸ்வரம் கோயில் தக்கார் ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி உள்ளிட்டோர் கோயில் குருக்கள்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அர்ச்சகர்களிடம் விஜயேந்திரரை தடுக்க வேண்டாம் எனக் கூறினார். பின்னர் விஜயேந்திரர் கருவறைக்குள் சென்று தான் கொண்டுவந்த கலசத்தில் இருந்த கங்கை தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தார்.