விடிவு பெற்ற நர்மதபுரம்

மத்தியபிரதேசம், ஹோஷங்காபாத்தில் நர்மதை ஜெயந்தியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், அம்மாநில ​​முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உரையாற்றினார். அப்போது, “நான் 2008 முதல் ஹோஷங்காபாத் பெயரை நர்மதபுரா என மாற்ற முயற்சிக்கிறேன், ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெயரை மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இப்போது, ​​இந்த முன்மொழிவுக்கு மத்திய அரசு நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும்” என கூறினார். சமீபத்தில், பி.எல்.பி கட்சி எம்.எல்.ஏ ராமேஸ்வர் சர்மா, ‘மால்வா முதல் சுல்தானான ஹோஷாங் ஷாவிந் பெயரால் அழைக்கப்படுகிறது. பல கொடுங்கோல் முஸ்லீம் ஆட்சியாளர்களைப் போலவே, ஹோஷாங் ஷாவும் கோயில்களை அழித்து, அவ்விடங்களில் மசூதிகளை கட்டினான். கொடுமைகள் பல புரிந்தான். எந்த ஒரு இடத்திற்கும் அந்த இடத்தை அழித்தவர்களின் பெயரை வைக்கக்கூடாது’ என கூறியிருந்தார். மேலும், நர்மதா ஆற்றின் பள்ளத்தாக்கில், ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஹோஷங்காபாத் மாவட்டத்தின் தலைமையகமான ஹோஷங்காபாத் நகர் ஏற்கனவே உள்ளூர்வாசிகளிடையே நர்மதாபுரம் என்றே அழைக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.