சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலைகளில் சட்டவிரோதமாக நிறுத்தப்படும் வாகனங்களால் சாலைகள் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதன் மறைவுகளில் ஒழுங்கீனங்கள் நடைபெறுகின்றன. தேசிய நகர்புறக் கொள்கை விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்ரீகிருஷ்ண பகவத் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, நாடு முழுவதும் இந்த பிரச்சனை உள்ளது எனவே இந்த மனுத் தொடர்பாக, மத்திய மாநில அரசுகள் 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.