கேரளாவில் கொரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸிற்காகவே லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். சாதாரண மக்கள் தங்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் ஆளும் கம்யூனிச கட்சியினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் தடுப்பூசி கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்நிலையில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள சக்திக்குளங்கராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜின் முயற்சியால் மாநில அரசு இலவச தடுப்பூசி இயக்கம் நடத்தி வருகிறது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல மத மற்றும் தொண்டு நிறுவனங்கள் தடுப்பூசி இயக்கங்களை நடத்தி வருகின்றன, ஆனால் அது தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து நடத்தப்படுகிறது. ஆனால், ஒரு மாநில அரசே ஒரு மத நிறுவனத்தில் தடுப்பூசிகள் விநியோகிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.