ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற திறந்தநிலை விவாதத்தில் தனது உரையைத் தொடங்கிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், அதனை பராமரிப்பது குறித்த செய்தியை விளக்கும் யஜுர்வேத பாடலான ‘பூமி சாந்திராபா…’ என்ற யஜுர்வேத பாடலை கூறி, ‘விண்வெளி, வானம், பூமி ஆகியவற்றில் ஒரு சமநிலை இருக்கட்டும்…’ என்ற அதன் பொருளையும் எடுத்துரைத்தார். மேலும் தனது பேச்சின் முடிவில், ‘அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்…’ என துவங்கும் ‘சர்வே பவந்து சுகினஹ…’ என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை சொல்லி நிறைவு செய்தார். ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சமஸ்கிருதம் ஒலிப்பது இதுவே முதல்முறை.