உக்ரைனின் ஹிந்துஃபோபியா

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாடு பாரதத்திடம் மனிதாபிமான உதவியை நாடி கையேந்தி நிற்கிறது. அதே சமயம், உக்ரைன் பார்தத்தின் கலாச்சாரத்தை இழிவுபடுத்தி வருகிறது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு டுவிட்டர் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ஹிந்து தெய்வமான காளி தேவியை கேலி செய்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளதால் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இது ஹிந்து சமுகத்தினர், அவர்களது நம்பிக்கைகள் மீது உக்ரைன் அரசின் திட்டமிட்ட தாக்குதலாகவே தெரிகிறது. கடந்த ஏப்ரல் 30 அன்று உக்ரைனின் டிஃபென்ஸ் ஆஃப் உக்ரைனின் அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் பகிரப்பட்ட அந்த டுவிட்டர் பதிவில், ஒரு மேக வெடிப்பு காரணமாக உருவான ஒரு பெரிய மேகம் நீல நிற தோலுடன் கூடிய ஒரு பெண்ணின் உடையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு நீண்ட நாக்கு, கழுத்தில் மண்டை ஓடுகளின் மாலை போன்றவற்றுடன் காளி போன்ற ஒரு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அந்த புகைப்படத்தில் உள்ள பெண் ஒரு மோசமான கோணத்தில் நிற்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம், “கலை வேலை” (Art Work) என்று குறிப்பிட்டுள்ளது. ஹிந்து தெய்வத்தை கேலி செய்து தனது ஹிந்து மத எதிர்ப்பு வெறியை வெளிப்படுத்திய உக்ரைனின் மீது பாரதத்தின் சமூக ஊடகப் பயனர்கள் கடும் கோபமடைந்து அதற்கு எதிரான கருத்துகளை பதிவிட்டனர். இதையடுத்து அந்த பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது.