அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது, பிற நாடுகளின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது நமது வேலையில்லை என கூறி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் விலக்கலை அறிவித்தார். மே முதல் தேதி இதற்கு கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஆப்கன் அரசு தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்தது அமெரிக்க அரசு. ஆனால் படைகளை முழுமையாக விலக்கிக்கொண்டால் தான் பேச்சுவார்த்தை என தலிபான்கள் கூறியுள்ளனர். தற்போது புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றிருப்பதால் 5 மாத தாமதமாக அதாவது, செப்டம்பர் 11-க்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,500 அமெரிக்க வீரர்கள் ஆப்கனில் உள்ளனர். இதனால், தலிபான்கள் ஆதாயமடைவார்கள், ஆப்கன் அரசு நிலத்தை தக்க வைக்க தலிபான்களுடன் போராட வேண்டியிருக்கும் என அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.