டுவிட்டருக்கு மாற்றாக, பாரதத்தில் வேகமாக உருவெடுத்துவரும் சமூக ஊடக செயலி, ‘கூ’. அரசு அமைப்புகளும் இனி டிவிட்டருக்கு மாற்றாக ‘கூ’ செயலியை பயன்படுத்த சிந்தித்து வருகின்றன. இச்செயலியை, 30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் தாய் நிறுவனமான ‘பாம்பினேட்’, ‘கூ’ செயலியை மேலும் வளர்க்கும் நோக்கில் செயல்பட்டுவருகிறது. இச்செயலியில் ஆக்சல் பார்ட்னர்ஸ், 3 ஒன் 4 கேப்பிட்டல், புளூமி வெஞ்சர்ஸ், கலாரி கேப்பிட்டல் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதுவரை ரூ. 30 கோடி முதலீடு திரட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இதில் முன்னதாக முதலீடு செய்திருந்த சீன நிறுவனமான ‘ஷன்வே’ தான் வைத்திருந்த 9 சதவீத பங்குகளை விற்று இதில் இருந்து முழுவதுமாக வெளியேறுகிறது.