விவசாய சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறை போராட்டத்தை ஆதரித்து கருத்து வெளியிட்ட 1,178 கணக்குகளை முடக்க பாரத அரசு டிவிட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால் அதில் வெறும் 500 கணக்குகளை மட்டுமே டிவிட்டர் முடக்கியது. தங்கள் நிர்வாக சட்டப்படி அவை கருத்து சுதந்திரம், அவற்றை முடக்க முடியாது என வாதிட்டதுடன், இது குறித்து மத்திய அரசுடன் பேச விரும்புவதாகவும் கூறியது. இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் டிவிட்டர் நிர்வாகிகளுடன் பேச மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.