கொரோனா காலத்தில் பாரதத்தில் உள்ள மக்களுக்கு உதவ தங்களது நிறுவன பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் ஆக்ஸிஜனை வழங்க முன்வந்துள்ள டாடா நிறுவனம், இதற்கு ஏதுவாக திரவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தணிப்பதற்கும் 24 கிரையோஜெனிக் கொள்கலன்களை இறக்குமதி செய்கிறது. இதேபோல, தேசத்தின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேசத்திற்கு தோள் கொடுக்க பாரதத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளன. தங்களால் முடிந்ததை கொட்டிக்கொடுக்கின்றன. 2020ல் கொரோனாவின் முதல் அலையின் போதும் இவை தேசத்திற்கு அளப்பறிய பங்களிப்பை செய்துள்ளன. ஆனால், பாரதத்தில் தொழில் செய்யும் பல வெளிநாட்டு நிறுவனங்களோ அல்லது தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களின் நிறுவனங்களோ இதுவரை கிள்ளிக்கூட தரவில்லையே ஏன், நம் தேசத்தின் மக்களால் கொழுத்த லாபமடையும் இவர்கள், அதே மக்களுக்கு ஒரு துன்பம் வரும்போது மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை, இதுதான் இவர்களது தேசப்பற்றா, இதுவே இவர்களது மனிதாபிமானத்தின் எல்லையா? இதனை மக்களும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.