இது வன்முறை அல்ல இன அழிப்பு

தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் பல லட்சம் ஹிந்துக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர் முஸ்லிம்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதே போன்றதொரு வன்முறை 44 வருடங்கள் கழித்து, காஷ்மீரில் வாழ்ந்த ஹிந்துக்கள் மீது 1990களில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டது. அங்கு வாழ்ந்த ஆயிரக்கணகான ஹிந்துக்கள் தங்கள் சொந்த பூமியான காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டே துரத்தப்பட்டனர்.

தற்போது இதே காட்சி சுமார் 30 வருடங்கள் கழித்து மீண்டும் நடக்கிறது மேற்கு வங்கத்தில், இது ஏதோ பா.ஜ.கவினர் மீது மட்டுமே நடத்தப்படும் வன்முறை என பலர் நினைக்கின்றனர். ஆனால் கள எதார்த்தம் வேறு. அங்கு பல கம்யூனிச தொண்டர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் மட்டும்தான்.

அங்கு ஹிந்துக்கள் மட்டுமே தேடிப்பிடித்துக் கொல்லப்படுகின்றனர். இதனால் பலர் கூட்டம் கூட்டமாக அசாம் உள்ளிட்ட பல அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக செல்கின்றனர். மேற்கு வங்கத்திற்கு இது ஒன்றும் புதிது அல்ல. இதே போன்றதொரு வன்முறை 1946ல் நடைபெற்றது. ‘ஹே ராம்’ படத்தில்கூட அதன் ஒருதுளியை நீங்கள் பார்த்திருக்கலாம். அங்கு வாழும் அனைத்து ஹிந்துக்களும் எப்போதும் ஒருவித பயத்துடனேயே வாழ்கின்றனர்.

அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரில் இடங்களில் இருந்து திருட்டுத்தனமாக குடியேறிய முஸ்லிம்கள் அங்கு இதுபோன்ற கொடூர செயல்களை அரங்கேற்றுகின்றனர். அதுவும், மமதா அங்கு ஆட்சிக்கு வந்த பிறகு இவை பல மடங்கு பெருகிவிட்டன. இது மமதாவின் திருணமூல் கட்சி சார்பில் நடத்தப்படும் வன்முறை அல்ல. அங்குள்ள முஸ்லிம்கள், ஹிந்துக்கள் மீது திட்டமிட்டு நடத்தும் ஒரு இன அழிப்பே என்பது நன்றாகவே தெரிகிறது.

மத்திய அரசு இதற்கு மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இன்று அங்கு நடப்பது நாளை வேறு எங்கும் நடக்கலாம். எனவே ஹிந்துக்கள் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் இருப்பது மிக அவசியம் என்பதை காலம் நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகிறது. இதனை ஹிந்துக்கள் உணர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

மதிமுகன்