தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் விஷ சாராயம் குடித்து 22 பேர் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரையில், மதுரை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. Also Read – மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை இந்த ஆர்ப்பாட்டங்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்த்தில் கலந்துகொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது. தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை தி.மு.கவினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை ஏதேனும் உள்ளதா, இல்லையா என்பது அவர்களது மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த தேசத்துகான தீர்ப்பு” என கூறினார்.