அவர்கள் விவசாயிகளே அல்ல

இந்தியா டுடே தொலைக்காட்சி, பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளுடன் தான் பேசி நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷன் எனப்படும் ரகசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ‘பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி எங்கள் மேலதிகாரிகளுக்கு நாங்கள் எடுத்துச் சொன்னோம். அந்த போராட்டக்காரர்கள் விவசாயிகளே இல்லை, அவர்கள் பயங்கரவாதிகள் என்று எடுத்துச் சொன்னோம். ஆனால், மேலதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை’ என கூறியுள்ளனர். மேலும் வேறுபல அதிச்சித் தகவல்களையும் வெளியிட்டு உள்ளனர். இந்த ஸ்டிங் வீடியோவில் வெளியான தகவல்கள், காலிஸ்தான் பயங்கரவாதிகள் இதனை நங்கள்தான் செய்தோம் என ஒப்புக்கொண்டது, பஞ்சாப் முதல்வர் உள்துறை அமைச்சக தொலைபேசி அழைப்புகளை புறக்கணித்தது, புரோட்டாக்கால்படி எந்த அமைச்சரும் டி.ஜி.பியும் பிரதமருடன் பயணிக்காதது, இதுகுறித்து தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மௌனம் காப்பது, காங்கிரஸ்காரர்களும், சரத்பவார் உட்பட பலரும் பஞ்சாப் முதல்வருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக பேசுவது போன்ற பல விஷயங்கள் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உட்பட சில கட்சிகள், காலிஸ்தான் பயங்கரவாதிகள், சில வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரம் சம்பந்தமாக நீதிமன்றத்தில், ‘நீதிமன்றம் குழு அமைத்து விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.