மத்திய பிரதேசத்தின் இந்தூரில், பிரகாஷ் நாகேலே என்பவர் தன்னை கிறிஸ்தவ மதம் மாற தனது மனைவியும் மனைவியின் தாய், சகோதரர் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கட்டாயப்படுத்தியதாகவும் 50.000 பணம் கேட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பணம் தரவும் மதம் மாறவும் மறுத்த காரணத்தால் அவர்கள் தன்னை தாக்கி தனது மத நூலைக் கிழித்து எறிந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். பிரகாஷ் நாகலேவின் மனைவியும் சகோதரரும் மதம் மாற அந்த கிறிஸ்தவ அமைப்பு ஒரு இருசக்கர வாகனத்தை பரிசளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாகேலேவின் குற்றச்சாட்டை அடுத்து, அவரின் மனைவி மற்றும் அவரது 9 குடும்ப உறுப்பினர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்தியது, வன்முறை, கலகம் விளைவித்தல் ஆகிய குற்ரச்சாடுகளின் கீழ் துவாரகாபுரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.