இடதுசாரி ஆதரவு ஊடகமான என்.டி.டி.வியின் செய்தியாளரான ஜாஸ்மின் ஜோஸ் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், எங்கள் குடும்பம், கேரளாவில் உள்ள பத்தனம்திட்டாவில் உள்ளூர் வியாபாரம் செய்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி, இடதுசாரிகளின் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் எங்கள் வணிக நிறுவனத்தின் பொருட்களை ஏற்றி இறக்க விடுவதில்லை. அவர்கள் என் சகோதரரையும் என் குடும்பத்தையும் மிரட்டுகின்றனர். அவர்களால் என சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. என தெரிவித்தார். அதனுடன், சி.ஐ.டி.யு உறுப்பினர்கள் அங்கு பிரச்சனை செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் அங்குள்ள உள்ள ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் பாதுகாப்பாக தங்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடதுசாரி தொழிலாளர் சங்கங்களுக்கு ‘பாதுகாப்புப் பணம்’ என்ற கப்பத்தை கட்ட வேண்டியுள்ளது. சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு ‘காக்கிங் கட்டணம்’ கொடுக்க வேண்டும். நாமாக ஏற்றி இறக்கினாலும்கூட அவர்களுக்கு ‘நோக்கு கூலி’ கொடுத்தாக வேண்டும். சமீபத்தில் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவிலேயே அவர்கள் இதற்காக பெரிய பிரச்சனையை செய்தனர். கேரள உயர்நீதிமன்றம் பினராயி விஜயன் அரசிடம் இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டும், நோக்குகூலி பழக்கம் கேரளாவின் நன்மதிப்பைக் கெடுக்கிறது. மாநிலத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறது எனகூறியும் கேரள அரசு அதனை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.