பீகாரின் கயாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவன், தனது புத்தகப் பையில் பகவத் கீதை மற்றும் ஜபமாலையை எடுத்து வந்தான். இதனை பார்த்த அப்பள்ளியின் முஸ்லிம் ஆசிரியர் சதாப் ஜஹான், பையில் இருந்த கீதையையும் ஜபமாலையையும் எடுத்து அவற்றை குப்பைத் தொட்டியில் வீசினார். சிறுவனின் தலைமுடியைப் பிடித்து கரும்பலகையில் முட்டி, மீண்டும் உன் பையில் கீதை கிடைத்தாலோ, இதனை யாரிடமாவது சொன்னாலோ உன் தோலை உரித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். சிறுவனும் அவனது குடும்பமும் இஸ்கான் பக்தர்கள். இதனை அறிந்த சிறுவனின் தந்தை ராகுல் சிங், இதுகுறித்து காவல் நிலையதில் புகார் அளித்தார். ஆனால், காவலர்கள் புகாரை ஏற்க மறுத்ததுடன் அவரது மகனை வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து, அப்பள்ளியின் அதிகாரிகள் மாணவனை விசாரித்தனர். குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இது நிரந்தர பணி நீக்கமா அல்லது தற்காலிகமானதா என பள்ளி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கவில்லை.