கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளைப் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், ஆசிரியை செய்யும் மதமாற்றம் குறித்த குற்றம்சாட்டை கூறும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் பணிபுரியும் தையல் கலை ஆசிரியையான பியாட்ரீஸ் தங்கம், தையல் வகுப்புக்கு வரும் ஹிந்து மாணவிகளிடம் ஹிந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதாகவும் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாகவும் அம்மாணவி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் நேரில் விசாரணை நடத்தி ஆசிரியை பியாட்ரீஸ் தங்கத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.A