சூரிய கோபுரம்தான் குதுப் மினார்

மத்திய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா என்பவர், “டெல்லியில் இருப்பது குதுப் மினார் கோபுரமும் அல்ல. அது குதுப் அல் தீன் ஐபக்கால் கட்டப்பட்டது அல்ல. அது 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்ட சூரிய கோபுரம். சூரியன் இடம் மாறும் திசையை அறியவே கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் சார்பில் நான் அங்கு ஆய்வு செய்தபோது அதற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன. சூரியனின் திசையை அறியும் வகையில், இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். ஜூன் 21ம் தேதி இதன் நிழல் அரை மணி நேரத்திற்கு கீழே விழாது. அந்தளவுக்கு அந்த காலத்திலேயே அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட கோபுரம் அது. இந்த கோபுரமானது ஒரு தனிப்பட்டக் கட்டடம். அதற்கும் அருகிலுள்ள மசூதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.