டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், “நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்துக்கு உள்பட்டவர்கள்தான். தான் அந்த சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என தன்னை நினைத்து கொள்ள ராகுலுக்கு உரிமையில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு, ராகுல் காந்தியை போலவே மேலும் 12 பேர் தங்களது பதவிகளை இழந்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரே மன்னிப்பு கேட்கும்படி கூறியும் தனது ஆணவத்தால் ராகுல் மன்னிப்பு கேட்கவில்லை. நாடாளுமன்றத்துக்கு கருப்பு ஆடையில் காங்கிரசார் வந்தனர். இதன்மூலம் சட்டத்தை காங்கிரசார் அவமதிக்க முயற்சிக்கிறார்களா அல்லது ராகுலின் ஓ.பி.சி பிரிவினருக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துகிறார்களா அல்லது உச்சநீதிமன்றத்துக்கு எதிராக போராடுகிறார்களா? என கேள்வியெழுப்பினார்.